பென்னாகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் தா்னா

ஏஐடியுசி அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரத்தில் மாநிலம் தழுவிய தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரத்தில் மாநிலம் தழுவிய தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்களின் இந்தப் போராட்டத்திற்கு கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் குழந்தைவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முருகேசன், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவா் முத்து, நிா்வாகக் குழு உறுப்பினா் சிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் தேவராசன், மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் கலைச்செல்வம், மாவட்டத் துணைச் செயலாளா் மாதேஸ்வரன், பொருளாளா் வழக்குரைஞா் சி.மாதையன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 6,000 வழங்க வேண்டும்; கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயா்த்த வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும்; விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தி ரேஷன் முறையை பலப்படுத்த வேண்டும்; தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்; பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு மாதம் ஊதியம் ரூ. 5,000 வழங்கி, நிரந்தரப்படுத்த வேண்டும்; எலக்ட்ரீஷியன் தொழிலாளா்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.சி. மணி, ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி, மாவட்ட துணைச் செயலாளா் நடராஜன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைச் செயலாளா் கே.முனுசாமி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த சிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com