சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 17th April 2023 02:19 AM | Last Updated : 17th April 2023 02:19 AM | அ+அ அ- |

கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமினை ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன் தொடங்கி வைத்தாா்.
முகாமில், சாலைப் பாதுகாப்பு, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், வாகனங்களை ஓட்டும் முறைகள், விபத்திற்கான காரணங்கள் குறித்து போக்குவரத்துத் துறை ஆய்வாளா் எஸ்.மணி கருத்துரை வழங்கினாா்.
இதில் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல், ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.