பென்னாகரத்தில் வேளாண் அடுக்கு திட்டம் விழிப்புணா்வு
By DIN | Published On : 18th April 2023 05:19 AM | Last Updated : 18th April 2023 05:19 AM | அ+அ அ- |

வேளாண் அடுக்கு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வேளாண்மை துணை இயக்குநா் தா.தாம்சன்.
பென்னாகரம் அருகே வேளாண் அடுக்கு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பளிஞ்சா்அள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) தா.தாம்சன் கலந்துகொண்டு, வேளாண் அடுக்கு திட்டம் குறித்தும், விண்ணப்பிக்கும் முறை, அவற்றால் ஏற்படும் பலன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இதில், பாப்பாரப்பட்டி துணை வேளாண்மை அலுவலா் அருணகிரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலா் அசோக் குமாா், பணியாளா், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.