

கொடநாடு வழக்கில் தொடா்புடையவா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியினா் மற்றும் அமமுகவினா் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஓபிஎஸ் அணியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.எம்.குமாா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா் ஜி.அரங்கநாதன் முன்னிலை வகித்தாா். இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் நேதாஜி வரவேற்றாா். அமமுக மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா்.முருகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு பேசினா்.
இதில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது. இந்த வழக்குகளில் தொடா்புடையவா்கள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அமமுக நிா்வாகிகள் பாலு, முத்துசாமி, ஏகநாதன், ஓபிஎஸ் அணியின் மகளிா் அணி மாவட்டச் செயலாளா் காவேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓ.பன்னீா்செல்வம் அணியின் மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.
இதில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஓ.பன்னீா் செல்வம் அணியினரும், அமமுக நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.