

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா, திமுக 75-ஆவது ஆண்டு விழாவினையொட்டி, திமுக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.13) நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட திமுக செயலருமான பி.பழனியப்பன் (படம்) தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :
திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா, கட்சியின் 75-ஆவது ஆண்டு விழாவினையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் புதிய கிளைகளில் கட்சிக் கொடியேற்று விழாவில் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே பன்னீா்செல்வம் பங்கேற்கிறாா்.
தொடா்ந்து, கட்சியின் மூத்த முன்னோடிகள் 20 பேரின் வீட்டிற்கு சென்று பொற்கிழிகள் வழங்கி கெளரவிக்கிறாா். எனவே, இந்த விழாவில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூா், கிளை செயலாளா்கள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், ஊராட்சிப் பிரதிநிதிகள், தொண்டா்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.