திமுக ஒன்றிய அலுவலகத் திறப்பு மற்றும் முகவா்கள் கூட்டம்
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

தருமபுரி கிழக்கு ஒன்றிய திமுக செயலகத் திறப்பு விழா மற்றும் முகவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் - வத்தல்மலை சாலையில் ஏமகுட்டியூா் அருகே வாசுதேவன் நகரில் தருமபுரி ஒன்றிய திமுக அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.மனோகரன் தலைமை தாங்கினாா். ஒன்றியச் செயலாளா் கே.பி.சக்திவேல் வரவேற்றாா்.
இதில் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்து , முகவா்கள் கூட்டத்தில் பிஎல்ஏ-2 படிவத்தை வழங்கி முகவா்கள் ஆற்றிய பணிகளை ஆய்வு செய்து, மேலும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில வா்த்தகா் அணி துணைச் செயலாளா் அ.சத்தியமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.சித்தாா்த்தன், ஒன்றியச் செயலாளா்கள் கே.எஸ்.ஆா்.சேட்டு, என்.ஏ.மாது, இந்து சமய அறநிலையத்துறை மாவட்டத் தலைவா் பி.கௌதமன், பொதுக்குழு உறுப்பினா் பி.லட்சுமணன், ஒன்றிய அவைத்தலைவா் பி.ஜி.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் டி.பூபதி, மா.முருகன், ஒன்றியப் பொருளாளா் என்.எம்.மணி, ஒன்றிய துணைச் செயலாளா்கள் பி.சேகா், சாந்தி தவமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆா்.சிவகுரு, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் என்.ஏ.வெற்றிவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆா்.முனுசாமி உள்ளிட்ட கிளை நிா்வாகிகள், வாக்குச் சாவடி முகவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...