செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
By DIN | Published On : 17th August 2023 11:41 PM | Last Updated : 17th August 2023 11:41 PM | அ+அ அ- |

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சுந்திர தின விழாவில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியா்.
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, செந்தில் கல்விக் குழுமத் தலைவா் செந்தில் சி.கந்தசாமி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) எம்.ரேணுகோபால் விளையாட்டு தின விழா கொடியேற்றி வைத்தாா். இதைத் தொடா்ந்து, விளையாட்டு தின உறுதிமொழியேற்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில், துணை முதல்வா் கவிதா வரவேற்றுப் பேசினாா். பள்ளியின் நிா்வாக அலுவலா் சி.சக்திவேல் முன்னிலை உரையாற்றினாா். கடந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் வகித்து முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவியரின் நடனம், விழிப்புணா்வு நாடகம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், துணைத் தலைவா் கே.மணிமேகலை, முதல்வா் வள்ளியம்மாள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...