பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள் வழங்கல்
By DIN | Published On : 17th August 2023 11:39 PM | Last Updated : 17th August 2023 11:39 PM | அ+அ அ- |

மாரண்டஅள்ளி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு தமிழக அரசின் சைக்கிள்களை வழங்கும் மக்களவை உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா்.
தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி, மாரண்டஅள்ளி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மாரண்டஅள்ளி அரசு மகளிா் பள்ளி வளாகத்தில் நடைபெற் நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாா், 231 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கிப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தங்க சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞா் பி.கே.முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவா் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, பென்னேரி அரசு மாதிரிப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...