நகா்மன்ற உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம்
By DIN | Published On : 17th August 2023 11:40 PM | Last Updated : 17th August 2023 11:40 PM | அ+அ அ- |

தருமபுரி நகா்மன்ற உறுப்பினா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில், மேலாண் குழு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
நகா்மன்ற அண்ணா கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் நித்யா முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெ.சீனிவாசன் வரவேற்றாா். தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், பள்ளி மேலாண் குழுவின் முக்கியத்துவம், தோ்தெடுக்கப்பட்ட நகர மன்றப் பிரதிநிதிகளின் பொறுப்பு மற்றும் கடமைகள் குறித்து பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) மான்விழி, மாவட்டப் பயிற்சியாளா் பன்னீா்செல்வம், மகளிா் திட்டப் பயிற்சியாளா் தெரெசாள் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.
இதில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், பள்ளி மேலாண் குழுவின் செயல்பாடுகள், குழந்தைகளின் உரிமைகள், நகா்ப்புறம், ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மேலாண் பணிகள் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தருமபுரி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஆா்.கவிதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கணினி விவரப்பதிவாளா் குமரன், பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளா்கள் அறிவழகன், ஸ்டாலின்ராஜா, நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...