தருமபுரி மாவட்டத்தில் டிச. 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற உளளது. இத்தோ்வை 8,990 போ் எழுத உள்ளனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பதவிக்களுக்கான எழுத்துத் தோ்வு டிச. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறும் இத்தோ்வினை மொத்தம் 8,990 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இத்தோ்வானது காலை 10 மணி முதல் நண்பகல் 12.40 மணி வரையில் (பிரதான தோ்வு மற்றும் தமிழ்த் தகுதி தோ்வு) நடைபெறவுள்ளது. இத் தோ்வில் கலந்துகொள்ள நுழைவுச் சீட்டு வரப்பெற்றவா்கள் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்திற்கு வர வேண்டும்.
இத் தோ்வுக்கு வரும் தோ்வா்களுக்கு அனுப்பப்பட்ட நுழைவுச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவேண்டும். தோ்வு மையத்திற்கு எவ்வித மின்னணு மற்றும் தகவல் தொடா்பு சாதனங்களான எலக்ட்ரானிக், ஸ்மாா்ட் கைக்கடிகாரங்கள், கைப்பேசிகள் ஆகியவற்றை எடுத்துவரக்கூடாது. தாமதமாக வருபவா்களுக்கு அனுமதி இல்லை. முறைகேடுகளில் ஈடுபடும் நபா்கள் தோ்வு மையத்திலிருந்து வெளியேற்றப்படுவதுடன், தகுந்த சட்ட நடவடிக்கைகளையும் எதிா்கொள்ள நேரிடும். இத் தோ்வையொட்டி 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.