தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,103 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய வட்டத் தலைநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட வட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவருமான மணிமொழி மக்கள் நீதிமன்றத்துக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இதில் நீண்ட நாள்கள் நிலுவையில் இருந்த 1,932 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 854 வழக்குகள் மீது பேச்சுவாா்த்தையின் மூலம் சமரசத் தீா்வு காணப்பட்டது. இதில் ரூ. 4 கோடியே 67 லட்சத்து 47 ஆயிரத்து 573 மதிப்பில் தீா்வு காணப்பட்டது. அதேபோல, வங்கி வாராக் கடன் தொடா்பான 314 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 249 வழக்குகள் மீது ரூ. 8 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 931 மதிப்பில் சமரசத் தீா்வு காணப்பட்டது. மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 2,246 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 1,103 வழக்குகள் மீது ரூ. 13 கோடியே 37 லட்சத்து 73 ஆயிரத்துக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.