தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் முன்பு நடைபெற்ற இந்த விழாவுக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் தலைமை வகித்தாா்.
இதில், மாட்டு வண்டிகள், டிராக்டா்கள், லாரிகள் உள்ளிட்ட கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களில் இரவு நேரத்தில் பின்புறம் ஒளிரும் பிரதிபலிப்பான்களை ஒட்ட வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவோா் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்தி வாகனங்களை இயக்கக் கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, கரும்பு பாரம் ஏற்றி வந்த வாகனங்களின் பின்பகுதியில் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டன.
இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா் வெங்கிடுசாமி, சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் சக்திவேல், சா்க்கரை ஆலைப் பணியாளா்கள், ஓட்டுநா் பயற்சி பள்ளி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.