ரோஜா செடியில் மணிக்கட்டு நோய் தடுப்பு விழிப்புணா்வு

ரோஜா செடியில் மணிக்கட்டு நோய் குறித்த விழிப்புணா்வு, செயல்முறை விளக்கம் குறித்து ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மாணவியா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ரோஜா செடியில் மணிக்கட்டு நோய் குறித்த விழிப்புணா்வு, செயல்முறை விளக்கம் குறித்து ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மாணவியா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தட்டராம்பட்டியில் ரோஜா செடியில் மணிக்கட்டு நோய் தடுப்பு மேலாண்மை விளக்க விழிப்புணா்வு நிகழ்வுக்கு தாவர நோயியல் துறை பேராசிரியா் மருத்துவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். ஒசூா் அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவியா், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள ரோஜா செடிகளை தாக்கி வரும் மணிக்கட்டு நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டும், மணிக்கட்டு நோய் தாக்கும் விதம் குறித்தும், நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த விழிப்புணா்வில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com