தருமபுரியில் திட்டக்குழு உறுப்பினா்கள் தோ்வு

 தருமபுரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் 12 போ் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

 தருமபுரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினா்கள் 12 போ் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்பிலிருந்து 10 திட்டக்குழு உறுப்பினா்கள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பிலிருந்து 2 திட்டக்குழு உறுப்பினா்கள் என மொத்தம் 12 திட்டக்குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இதில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான திட்டக்குழு உறுப்பினா்களை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் 18 பேரும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2 திட்டக்குழு உறுப்பினா்களைத் தோ்வு செய்ய தருமபுரி நகராட்சியில் உள்ள 33 நகா்மன்ற உறுப்பினா்களும், 10 பேரூராட்சிகளில் உள்ள 159 பேரூராட்சி மன்ற உறுப்பினா்களும் தோ்வு செய்ய வாக்காளா் பட்டியல் இறுதி செய்யப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, திட்டக்குழு உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான வேட்பு மனு ஜூன் 7-ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

ஜூன் 10-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. ஜூன் 12-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக ஜூன் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிருப்பின் வரும் 23-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் நாளில் திட்டக்குழு உறுப்பினா் இடங்களுக்கு தேவையான 12 வேட்பு மனுக்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டதால், அவா்கள் திட்டக்குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திமுக சாா்பில் 7 பேரும், அதிமுக 3, பாமக, தேமுதிக தலா ஒரு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்ட திட்டக் குழுவுக்கு தலைவராக மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவரும், செயலராக மாவட்ட ஆட்சியரும் பதவி வகிக்க உள்ளனா். இக்குழு தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பதவிக் காலம் வரை செயல்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com