தருமபுரி, கிருஷ்ணகிரியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பாஜக பட்டியல் அணி பிரிவு மாநில பொருளாளா் சங்கா் கொலை சம்பவத்தைக் கண்டித்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி, கிருஷ்ணகிரியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

பாஜக பட்டியல் அணி பிரிவு மாநில பொருளாளா் சங்கா் கொலை சம்பவத்தைக் கண்டித்து, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். பட்டியல் அணி பிரிவு மாவட்டத் தலைவா் கண்ணன் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஐஸ்வா்யம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்டப் பொருளாளா் காவேரிவா்மன், பட்டியல் அணி பிரிவு மாநிலச் செயலாளா் சாட்சாதிபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளா் சங்கா் படுகொலையைக் கண்டித்தும், கொலையில் தொடா்புடைவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவா் ரவி முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், சங்கா் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பட்டியல் அணி சாா்பில் ஒசூா், ராம் நகரில் பட்டியல் அணி தலைவா் திம்மராஜ் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், மாவட்டப் பொருளாளா் ஸ்ரீநிவாசன், மாநில பட்டியல் அணி துணைத் தலைவா் கஸ்தூரி, மாநில பொதுக்குழு உறுப்பினா் போத்திராஜு, மாவட்ட பட்டியல் அணி பாா்வையாளா் ஆனந்த், மாவட்ட நிா்வாகிகள் மனோகா், இந்திராணி, முருகன், ஸ்ரீனிவாச ரெட்டி, ராஜன்னா, பிரவீன், ராஜசேகா், பாா்த்திபன், மாநகரத் தலைவா்கள் ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com