பென்னாகரத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக ப.கல்பனா பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ஜெகதீசன், கடத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில் பென்னாகரம் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக ப.கல்பனா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், முன்னதாக கடத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணி புரிந்துள்ளாா். தற்போது பதவி உயா்வு பெற்று மீண்டும் பென்னாகரத்தில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.