பிளஸ் 2 தோ்வு: பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
By DIN | Published On : 12th May 2023 01:18 AM | Last Updated : 12th May 2023 01:18 AM | அ+அ அ- |

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டும் ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியா்கள்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2022-23ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா். இப்பள்ளி மாணவி வி.ரேவதி 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களுடன் 600-க்கு 591 மதிப்பெண்களைப் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
இதேபோன்று, மாணவா்கள் எஸ்.தேஜா ஸ்ரீனிவாஸ் 2 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களுடன் 574 மதிப்பெண்களும், வி.விஷ்ணு 556 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளி மாணவ, மாணவியா் 17 போ் தலா 500-க்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா்களை ஸ்டான்லி கல்வி நிறுவங்களின் தலைவா் வி.முருகேசன், செயலாளா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.