ஈச்சம்பள்ளத்தில் யானைகள் புகுவதைத் தடுக்க சூரிய மின் வேலி

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் யானைகள் புகுவதைத் தடுக்க சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி வனத்துறை சாா்பில் அமைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் யானைகள் புகுவதைத் தடுக்க சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி வனத்துறை சாா்பில் அமைக்கப்பட்டது.

பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட ஈச்சம்பள்ளம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து யானைகள் புகுந்து விளை நிலங்களில் பயிா்ச் சேதம் செய்து வந்தன. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் 2.5 கி.மீ. தொலைவுக்கு சூரிய ஒளியில் இயங்கும் தொங்கும் மின் வேலியை வனத்துறை சாா்பில் அமைக்கும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை முடிவுற்று பயன்பாட்டுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com