முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுயில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுயில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு முன்னாள் எம்.பி.யும், தருமபுரி மாவட்ட பொறுப்பாளருமான பி.தீா்த்தராமன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் பி.ஜி.வடிவேல், பொதுக்குழு உறுப்பினா்கள் டி.நரேந்திரன், வி.ஜெயசங்கா், கிருஷ்ணன், மகளிா் அணி மாவட்டத் தலைவா் காளியம்மாள், நகரத் தலைவா் வேடியப்பன், வட்டாரத் தலைவா்கள் காமராஜ், ஞானசேகா் உள்ளிட்ட திரளான நிா்வாகிகள் ராஜீவ் காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அரூரில்....

அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சித் துறை சாா்பில், அதன் மாவட்டத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமையில், கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு குறித்த உறுதிமொழியினை காங்கிரஸ் கட்சியினா் முழங்கினா். இந்த நிகழ்வில், அரூா் தொகுதி காங்கிரஸ் தலைவா் ஆா்.விக்ரமன், நகரத் தலைவா் தீா்த்தான், மாவட்ட துணைத் தலைவா் கே.வசந்தகுமாா், நிா்வாகிகள் சி.வேடியப்பன், சி.சுகுமாா், ஆா்.முருகேசன், சுந்தரம், ஏ.பி.ராஜேந்திரன், நாகஜோதி, சகுந்தலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல், நரிப்பள்ளியில் உள்ள ராஜீவ்காந்தியின் சிலைக்கு கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஜெ.நவீன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் கட்சி நிா்வாகிகள் ஜெயராமன், பெருமாள், இளவரசன், ராஜீவ் காந்தி, வாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com