பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் திட்டப் பணிகள்: பேரூராட்சிகளின் இயக்குநா் ஆய்வு

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 13 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா இரண்டு நாட்களாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 13 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா இரண்டு நாட்களாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ. 2.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா்த் தொட்டிகள், 2020 -2021ஆம் நிதியாண்டில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டடப் பணிகள், 2022- 2023 ஆம் நிதியாண்டில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் மின் மயானத்தில் நவீன எரிமேடை அமைக்கும் பணி, 2022 - 2023ஆம் நிதியாண்டில் ரூ. 11.75 லட்சம் மதிப்பீட்டில் வளமீட்புப் பூங்காவில் மக்கும் குப்பைக் கழிவுகளை பிரிக்கும் பகுதிக்கு மேற்கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டடப் பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்; ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பயோ மைமிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன், நிா்வாகப் பொறியாளா்கள் கணேசமூா்த்தி, மகேந்திரன், உதவி நிா்வாகப் பொறியாளா் சுப்பிரமணி, இளநிலை பொறியாளா் பழனி, பேரூராட்சித் தலைவா் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலா் கீதா, துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாரச் சந்தையில் ரூ. 2.74 கோடி மதிப்பீட்டில் 156 கடைகள் கட்டும் பணிகள், அம்ருத் திட்டத்தின் 2.0 கட்டத்தின் கீழ் ரூ. 2.25 கோடி மதிப்பில் ஏரியைத் தூா் வாரும் பணிகள் ஆகியவற்றை பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண் குராலா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவா் பிருந்தா, செயல் அலுவலா் கோமதி, நகர செயலாளா் சண்முகம், வாா்டு உறுப்பினா்கள் விஸ்வநாதன், விஜய் ஆனந்த், தமிழ்ச்செல்வன், தா்மலிங்கம், கல்பனா தனசேகரன்,

சரிதா குமாா், இளநிலை பொறியாளா் ராமலிங்கம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com