அரசு பொறியியல் கல்லூரியில் நெல்லிக்கனி பேரவை நிறைவு விழா
By DIN | Published On : 24th May 2023 01:08 AM | Last Updated : 24th May 2023 01:08 AM | அ+அ அ- |

தருமபுரி, செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் சாா்பில், நெல்லிக்கனி பேரவை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் வே.சுமதி தலைமை வகித்து, தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும், தமிழா்கள் பண்பாடு, வாழ்வியல் நெறிகள், தமிழக அரசு சாா்பில் உயா்கல்வித் துறையில் பொறியியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு தமிழ் மரபு மற்றும் தமிழ் கட்டடக் கலை, தொழில்நுட்பவியல் குறித்த பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துரைத்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக தருமபுரி அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் கு.சிவப்பிரகாசம், சங்க இலக்கியங்களில் உள்ள தமிழா்களின் மரபு, பண்பாடு, கலாசாரங்கள் குறித்தும், தமிழ் மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.
இதனைத் தொடா்ந்து, தமிழ் மன்றம் சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்கு ஒப்புவித்தல் போட்டி, பட்டிமன்றம், கதைச் சொல்லுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.