திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தேமுதிக தலைவா் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தாா்.

திமுக அரசு தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தேமுதிக தலைவா் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து விஜய பிரபாகரன் தருமபுயில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூா், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக சென்றுள்ளாா். ஏற்கெனவே துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று எந்த முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்தாா் என்று தெரியவில்லை. அவரது வெளிநாட்டு சுற்றுப் பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ரூ. 2,000 நோட்டுகள் வரும் செப். 30-ஆம் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்று மதிப்பீட்டு நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ. 2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படவில்லை. இது கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே அதை நாங்கள் வரவேற்கிறோம்.

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது. கள்ளச்சாராயம் குடித்து பலபோ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. நீட் தோ்வு, நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. வரும் மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைவா் விஜயகாந்த் முடிவு செய்வாா் என்றாா்.

அப்போது, கட்சியின் மாநில அவைத் தலைவா் டாக்டா் இளங்கோவன், மாவட்டச் செயலாளா்கள் குமாா், விஜய் சங்கா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com