பென்னாகரத்தில் 682 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 26th May 2023 11:13 PM | Last Updated : 26th May 2023 11:13 PM | அ+அ அ- |

பென்னாகரம் வருவாய் வட்டத்துக்கான ஜமாபந்தியில் 682 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், 57 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நான்கு நாள்கள் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்று வந்தது. இதில், பென்னாகரம் வருவாய் கிாமத்துக்குள்பட்ட பகுதிகளில் இருந்து முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனை, பட்டா, சிட்டா பெயா் மாற்றம், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 682 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலா் அனிதாவிடம் அளித்தனா். அவற்றில் 57 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மேலும், மீதமுள்ள மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.
இதில், பென்னாகரம் வட்டாட்சியா் செளகத் அலி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.