அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
By DIN | Published On : 15th November 2023 03:31 AM | Last Updated : 15th November 2023 03:31 AM | அ+அ அ- |

பென்னாகரம்: பென்னாகரம் அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் தின விழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவா்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனா். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் மா. பழனி, குழந்தைகளுக்கு நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கிப் பேசினாா். இதில் பள்ளி ஆசிரியா்கள் வளா்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி , ரேக்கா, ராஜேஸ்வரி, சத்துணவுப் பணியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...