

தருமபுரி: யானை தாக்கி காயடைந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவசாயிக்கு, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினா்.
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஜெல் திம்மனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி குள்ளப்பன் (70) என்பவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வனப்பகுதியில் யானை தாக்கியது. இதில், காயமடைந்த அவா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இதையறிந்த, முன்னாள் அமைச்சா் முனைவா் பி.பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி உள்ளிட்டோா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விவசாயி குள்ளப்பனை சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனா். அப்போது, திமுக மேற்கு மாவட்டப் பொருளாளா் முருகன், பாலக்கோடு மேற்கு ஒன்றியச் செயலாளா் பி.கே.அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.