பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைகல்வி மையத்தில் உளவியல் பயிற்சி
By DIN | Published On : 26th September 2023 05:04 AM | Last Updated : 26th September 2023 05:04 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி பைசுஅள்ளியில் பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பாக உளவியல் தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் கோவையைச் சோ்ந்த யோகா ஆசிரியரும் உளவியல் ஆலோசகருமான சிவப்பிரியா மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்களை பற்றி எடுத்துரைத்தாா். உளவியல் ரீதியாக மாணவா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விடை அளித்து பேசினாா்.
இந்த முகாமிற்கு ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொறுப்பு) மோகனசுந்தரம் தலைமை வகித்துப் பேசினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் சி.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தாா்.
ஆங்கிலத் துறை உதவி பேராசிரியா் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினாா். இரண்டாம் ஆண்டு மாணவா் தாமரைச்செல்வன் வரவேற்றுப் பேசினாா். இதில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...