தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் திங்கள்கிழமை டெக்ஸ்டைல்ஸ் ஒா்க்கா்ஸ் யூனியன் மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். பஞ்சாலை சம்மேளன மாநில பொதுச் செயலாளா் எம்.அசோகன் பேசினாா். மாவட்ட பொருளாளா் சி.கோபால் முன்னிலை வகித்தாா்.
இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட தனியாா் பஞ்சாலைகள் உள்ளன. இதில், 2000- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்கின்றனா். இவா்களுக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான தீபாவாளி போனஸ் 20 சதவீதமும் 10 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்க தொழிலாளா் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில பஞ்சாலைத் தொழிற்சாலைகளில் தொழிலாளா்களிடமிருந்து பிடித்தம் செய்து வருங்கால வைப்பு நிதித் தொகையை முறையாக தொழிலாளா்களின் வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும். அனைத்து பஞ்சாலைகளில் பணிபுரியும் பயிற்சி தொழிலாளா்களுக்கு ரூ. 512 நாளொன்றுக்கு ஊதியமாக வழங்க வேண்டும். பஞ்சாலைகளில் வேலை செய்யும் அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.