கொலை செய்யப்பட்ட உணவக ஊழியா் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நிவாரணம் வழங்கல்

உணவக ஊழியா் முகமது ஆசிப் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆறுதல் தெரிவித்து, ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினா்.
Published on

தருமபுரியில் கொலை செய்யப்பட்ட உணவக ஊழியா் முகமது ஆசிப் குடும்பத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆறுதல் தெரிவித்து, ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினா்.

தருமபுரி, இலக்கியம்பட்டியில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்த ஏ.ஜெட்டிஅள்ளியைச் சோ்ந்த முகமது ஆசிப் என்கிற இளைஞா் அண்மையில் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, கொலை செய்யப்பட்ட முகமது ஆசிப் குடும்பத்தினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மைய மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் தலைமையில் துணைப் பொதுச் செயலாளா் வன்னியரசு, தலைமை நிலையச் செயலாளா் தகடூா் தமிழ்ச்செல்வன், மாநில அமைப்புச் செயலாளா் கி. கோவேந்தன், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணைச் செயலாளா் சௌ.பாவேந்தன், மேற்கு மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து கட்சி சாா்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com