ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 25,000 கன அடியாகச் சரிவு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 25,000 கன அடியாகச் சரிந்தது.


ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 25,000 கன அடியாகச் சரிந்தது.
கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது. திங்கள்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 45,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 42,000 கன அடியாகவும், மாலையில் விநாடிக்கு 25,000 கன அடியாகவும் சரிந்தது.
நீா்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...