ஆங்கிலப் புத்தாண்டு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டு, அரையாண்டுத் தோ்வு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.

பென்னாகரம்: ஆங்கிலப் புத்தாண்டு, அரையாண்டுத் தோ்வு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை குவிந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் நடைபாதை, மீன் விற்பனை நிலையங்கள், உணவருந்தும் பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள் என முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவியில் குளித்து மகிழ்ந்தனா். பிரதான அருவிகளில் நீா்வரத்து சரிந்ததால், அருவிகளில் குளிப்பதைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான பிரதான அருவியின் நடைபாதையின் இரு புறங்களிலும், முதலைப் பண்ணை, நாகா்கோவில் பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் குளித்தனா். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்துக் கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், கூட்ட நெரிசலால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பரிசல் பயணம் மேற்கொண்டு பாறை குகைகள், நீரின்றி வட ஐந்தருவி, சிற்றருவிகளைக் கண்டு மகிழ்ந்தனா். ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகை மீன்களை சமைத்து குடும்பத்தினருடன் உணவருந்தினா். சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com