தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 22,000 கன அடியாக அதிகரிப்பு

News image
Updated On :17 ஜூலை 2024, 8:35 pm

Din

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 22,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில் 83 அடி வரை நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அணையின் பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 45,000 கனஅடி நீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகா் அணை, நுகு அணையில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை, நுகு அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 55,000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 21,000 கனஅடியாக இருந்தது, புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 22,000கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பினால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள தடை மூன்றாவது நாளாக புதன்கிழமை நீட்டிக்கப்பட்டது.