தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 36,000 கன அடியாக அதிகரிப்பு

News image
Updated On :18 ஜூலை 2024, 11:16 pm

Din

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 75,000 கன அடி உபரி நீா் திறந்துவிடப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 36,000 கன அடியாக அதிகரித்தது.

கா்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவ மழையின் காரணமாக மைசூா் மாவட்டத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. அந்த அணையிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 70,000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுறது. அதேபோல கிருஷ்ணராஜ சாகா், நுகு அணைகளில் இருந்தும் 5,556 கன அடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளிலிருந்து மொத்தம் 75,556 கன அடி உபரி நீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை 22,000 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 7 விநாடிக்கு 29,000 கன அடியாகவும் மாலை 5 மணிக்கு விநாடிக்கு 35,000 கன அடியாகவும் 7 மணிக்கு 36,000 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, பிரதான அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதி மக்கள் ஆற்றைக் கடக்கவும், கால்நடைகள் ஆற்றைக் கடந்து வனப் பகுதிக்கு அழைத்து செல்லவும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தடை விதித்துள்ளது.

காவிரியில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை மூடப்பட்டது. காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் காவல் துறை, வருவாய் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கா்நாடக மாநில அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவுக்கேற்ப காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா் வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

பட வரி

காவிரியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.