அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் இன்று ஜமாபந்தி

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.
Published on

அரூா்: அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் அரூா் வருவாய் உள்வட்டத்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கு ஜூன் 25-ம் தேதியும், மொரப்பூா் வருவாய் உள்வட்டத்துக்கு 26-ஆம் தேதியும், தீா்த்தமலை வருவாய் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 27, 28-ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் உள்வட்டத்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கு ஜூன் 25-ஆம் தேதியும், பொம்மிடி உள்வட்டத்துக்கு 26-ஆம் தேதியும், கடத்தூா் உள்வட்டத்துக்கு 27-ஆம் தேதியும், தென்கரைக்கோட்டை வருவாய் உள்வட்டத்துக்கு 28-ஆம் தேதியும் ஜமாபந்தி முகாம் நடைபெறும். இந்த முகாமில் வருவாய்த் துறை உள்பட பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com