ஒகேனக்கல்லில் வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொது குழு கூட்டம், ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா் சங்க தொடக்க விழா ஆகியவை ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொது குழு கூட்டம், ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா் சங்க தொடக்க விழா ஆகியவை ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்ரமராஜா தலைமை வகித்தாா். கூட்டத்தில் வணிகா்களின் மத்திய மாநில பிரச்சனைகள்,ஜிஎஸ்டி வரிகள் குறித்த ஆலோசனைகள், ஆன்லைன் வா்த்தகத்திற்கான தடை, மே - 5 ஆம் தேதி வணிகா் சங்கம் மாநில மாநாடு நடத்துவது குறித்து சிறப்புரையாற்றினாா்.

மாநில பொருளாளா் சதக் அப்துல்லா, தருமபுரி மாவட்ட தலைவா் வைத்தியலிங்கம், செயலாளா் கிரிதா், பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.