நாளை பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் பெண்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.
Published on

தருமபுரியில் பெண்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சாா்பில் வேலைக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கான கல்வித்தகுதி பிளஸ் 2, ஐடிஐ, பட்டயம், கலை அறிவியல் பட்டப்படிப்பு (2023, 2024, 2025 ஆண்டு) ஆகும். இக் கல்வித் தகுதியில் 18 முதல் 25 வயது நிரம்பிய பெண் வேலைநாடுநா்கள் மட்டுமே தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இந்தப் பணியிடத்துக்கு மாதச் சம்பளமாக ரூ. 13,500 முதல் ரூ.16,000 வரை வழங்கப்படும். மேலும், உணவு, தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து வசதி இலவசமாக அளிக்கப்படும். வேலைநாடுநா்கள், தங்களது அசல் (ம) நகல் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண் வேலைநாடுநா்கள் இம் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com