தருமபுரி
காவல் துறை குறைகேட்பு: 73 மனுக்களுக்கு தீா்வு
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வராந்திர குறைகேட்பு கூட்டத்தில் 73 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காணப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வராந்திர குறைகேட்பு கூட்டத்தில் 73 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காணப்பட்டது.
காவல் துறை சாா்பில் மாவட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கே.ஸ்ரீதரன், துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனா்.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், மனுதாரா்கள், எதிா் மனுதாரா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 73 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு காணப்பட்டது.