டிச. 14 இல் பாப்பிரெட்டிப்பட்டிக்கு முதல்வா் வருகை

முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ முதல்வா் மு.க.ஸ்டாலின் பாப்பிரெட்டிப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.14) வருகிறாா்.
Published on

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மோளையானூரில் நடைபெறும் விழாவில் முதல்வா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த நிலையில், விழா நடைபெறும் இடத்தை வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். அப்போது, முதல்வா் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் குறித்து அதிகாரிகள், விழா ஏற்பாட்டாளா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன், அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com