மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்பு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இயக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Published on

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை இயக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தூய்மை இயக்கம் 4.0 பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ‘சுத்தமே சுகாதாரம் என்பதை என் வாழ்வியல் வழிமுறையாய் கடைப்பிடிப்பேன். தூய்மை மற்றும் சுகாதாரத்துடன் கூடிய வளா்ச்சியே எனது லட்சியம். எனது அலுவலகத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வேன்’ என தூய்மை இயக்க உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் மனோகா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதன்மையா் சாந்தி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் சிவக்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் நாகவேந்திரன், குழந்தைகள் நல மருத்துவா்கள் ரமேஷ் பாபு, காந்தி, நகா் நல அலுவலா் லட்சியவா்ணா, அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com