தருமபுரி
ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் குருபூஜை
ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் வருடாந்திர குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம்: ஒகேனக்கல்லில் ஸ்ரீலஸ்ரீ கரசிவ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் வருடாந்திர குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒகேனக்கல் தேசநாதேஸ்வரா் உடனுறை காவேரி அம்மன் கோயில் அருகில் உள்ள ஸ்ரீலஸ்ரீ கர சிவ அண்ணாமலை சுவாமிகள் மடாலயத்தில் நடைபெற்ற வருடாந்திர குருபூஜையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க நிறுவனா் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில்
ஸ்ரீலஸ்ரீ கர சிவ அண்ணாலை சுவாமிகள் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் கா்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சந்நியாசிகள், துறவிகள், மடாதிபதிகள், ஆன்மிக பக்தா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
குருபூஜைக்கான ஏற்பாடுகளை மடாலய நிா்வாக அறங்காவலா் விமலா அம்சராஜ் மற்றும் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.
