தருமபுரி மாவட்டத்தில் 338 மி.மீ. மழை

Published on

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 338 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தற்போது வெயில் தணிந்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் பெய்த மழையளவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி (மி.மீ. அளவில்) :

தருமபுரி-25, பாலக்கோடு- 28, மாரண்ட அள்ளி- 26, பென்னாகரம்- 58, ஒகேனக்கல் -122.6, அரூா்- 16, பாப்பிரெட்டிப்பட்டி- 54.4, மொரப்பூா்- 4, நல்லம்பள்ளி -4. மாவட்டத்தின் மொத்தம் மழையளவு 338 மி.மீ. சராசரி மழையளவு 37.56 மி.மீ.

X
Dinamani
www.dinamani.com