தருமபுரி மாவட்டத்தில் ரூ. 4.59 கோடியில் தூய்மை இந்தியா திட்ட வளா்ச்சிப் பணிகள்

Published on

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின்கீழ், ரூ. 4.59 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் (எஸ்பிஎம் 2.0) திட்டத்தின்கீழ், ரூ. 52.98 லட்சத்தில் சமுதாயக் கழிப்பறைகள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணி, ரூ. 3.06 கோடியில் நகராட்சி உரக்கிடங்கில் நுண்ணுயிரி பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் பணி, ரூ. 85 லட்சத்தில் பொருள்கள் மீட்புக் கூடம் அமைக்கும் பணி, ரூ. 16 லட்சத்தில் எஸ்டிபி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின்கீழ், ரூ. 4.59 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com