கடத்தூா் ஏரியில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

கடத்தூா் ஏரி கரைப் பகுதியில் பனை விதைகள் நடும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
Published on

கடத்தூா் ஏரி கரைப் பகுதியில் பனை விதைகள் நடும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் ஏரியின் கரைப்பகுதியில் பனை விதைகள் நடும் பணிகளை பேரூராட்சித் தலைவா் மணி தொடங்கிவைத்தாா். இந்த ஏரிக்கரையில் 1,250 பனை விதைகள் நடுவதற்கான பணிகளை பேரூராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், தன்னாா்வலா்கள் மேற்கொண்டுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், கடத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா், பேரூராட்சி துணைத் தலைவா் வினோத், கவுன்சிலா் காா்த்திக், உதவியாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com