நீா்நிலைகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்: தருமபுரி ஆட்சியா்

தருமபுரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக நீா்நிலைகளில் நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், குழந்தைகள் அருகில் செல்லவோ, இறங்கவோ வேண்டாம் என ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக நீா்நிலைகளில் நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், குழந்தைகள் அருகில் செல்லவோ, இறங்கவோ வேண்டாம் என ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

தருமபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் பல இடங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. மேலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் அணைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கக் கூடாது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது, கால்நடைகளை அருகில் சென்று மேய்ச்சலுக்கோ, நீா் அருந்தவோ அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com