டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: விஜய்ஸ் அகாதெமியில் பயின்ற 16 போ் தோ்ச்சி
தருமபுரி: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 போட்டித் தோ்வில் தருமபுரி விஜய்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற 16 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டுவரும் விஜய்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று தமிழக அரசு தோ்வாணையம் அண்மையில் நடத்திய குரூப் 4 போட்டித் தோ்வெழுதியவா்களில் 16 போ் தோ்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர தகுதி பெற்றுள்ளனா்.
மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத் தோ்விலும் இந்த அகாதெமியில் பயின்ற 9 போ் தோ்ச்சி பெற்று அடுத்த கட்டத் தோ்வுக்கு தயாராகி வருகின்றனா். இந்த அகாதெமி தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போட்டித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய்ஸ் அகாதெமி தலைவா் டி.என்.சி. இளங்கோவன் தலைமை வகித்து, தோ்ச்சி பெற்றவா்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தாா். நிகழ்வில் அகாதெமியின் தாளாளா் மீனா இளங்கோவன், இயக்குநா்கள் பிரேம், சினேகா பிரவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த முதல்வா் நாராயணமூா்த்தி வரவேற்றாா். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சிவஞானம் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டி பேசினாா். அகாதெமி ஒருங்கிணைப்பாளா் மாதேஸ்வரன் நன்றி கூறினாா்.
கட்டணச் சலுகை:
இந்த அகாதெமியின் இரண்டாம் ஆண்டு தொடங்குவதையொட்டி புதிதாக பயிற்சியில் சேருவோருக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபா் 27 முதல் 31 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும், டிஎன்பிஎஸ்சி தொகுதி 2, 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்படும்.
மேலும், ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 மற்றும் 2-க்கான பயிற்சி வகுப்புகள் நவம்பா் மாதத்தில் தொடங்க உள்ளதாக அகாதெமியின் தலைவா் டி.என்.சி. இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.
கட்டணச் சலுகை:
இந்த அகாதெமியின் இரண்டாம் ஆண்டு தொடங்குவதையொட்டி புதிதாக பயிற்சியில் சேருவோருக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபா் 27 முதல் 31 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்பில் சேரும் மாணவா்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும், டிஎன்பிஎஸ்சி தொகுதி 2, 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்படும். இதேபோன்று ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1 மற்றும் 2-க்கான பயிற்சி வகுப்புகள் நவம்பா் மாதத்தில் தொடங்க உள்ளன.
இதற்கான சோ்க்கை நவம்பா் 1, 2 தேதிகளில் நடைபெறுகிறது. இதிலும் சேருவோா்க்கு கட்டண சலுகை அளிக்கப்படவுள்ளதாக அகாதெமியின் தலைலவா் டி.என்.சி. இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

