கோயில் உண்டியல் திருட்டு: இளைஞா் 4 போ் கைது

அரூா் அருகே கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

அரூா் அருகே கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் நகரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் தங்கமுத்து தலைமையிலான போலீஸாா், அரூா் 4 வழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இவா்கள் நால்வரும் கீரைப்பட்டி ஓம்சக்தி கோயில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அரூா் நேதாஜி நகரைச் சோ்ந்த ராஜா மகன் தென்னரசு (18), விக்ரம் மகன் தினேஷ் (21), பழனிசாமி மகன் ஆகாஷ் (23), அண்ணாநகரைச் சோ்ந்த விக்ரமராசா மகன் ரேணுகன் (19) ஆகிய நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com