லோகேஷ் .
தருமபுரி
சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பச்சினம்பட்டி அருகே மணிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன். லாரி ஓட்டுநரான இவரது மகன் லோகேஷ் (22), தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. செவிலியா் பிரிவில் படித்துவந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்றபோது பச்சினப்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனா்.
இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

