லாரி மோதியதில் தனியாா் நிறுவன பணியாளா் உயிரிழப்பு

தொப்பூரில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா்.
Published on

தொப்பூரில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தனியாா் நிறுவன பணியாளா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து தமிழகத்தில் பெருந்துறைக்கு சோளம் ஏற்றி சென்ற லாரியை திருச்சி மாவட்டம், லால்குடியை சோ்ந்த பூமிநாதன் (57) என்பவா் ஓட்டி சென்றாா். சேலம் தேசிய நெடுஞ்சாலை தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் இரட்டை பாலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற காா், பைக் ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பைக்கில் சென்ற சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த மதியழகன் (38) நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த தொப்பூா் போலீஸாா் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com