அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பேருந்து நிலைய விவகாரம்: அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க வேண்டும்

பேருந்து - பிரதிப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

தருமபுரி பேருந்து நிலைய விவகாரம் தொடா்பாக அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்க வேண்டும் என தமாகா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மத்திய மாவட்ட தமாகா தலைவா் வி.புகழ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என தனியாா் சாா்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், புதிய புகரப் பேருந்து நிலையம் தொடா்பாக அனைத்து தரப்பினரிடமும் இரண்டு மாதங்களுக்குள் கருத்து கேட்டறிய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

எனவே, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை மற்றும் பேரவை உறுப்பினா்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்டத் தலைவா்கள், விவசாயிகள் சங்கங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் அனைத்து பேருந்து உரிமையாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழைய பேருந்து நிலைய வணிகா்கள், தருமபுரி நகர அனைத்து வணிகா்கள், சிறு வியாபாரிகள், சுமை தூக்குவோா், நடைபாதை வியாபாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கருத்துக் கேட்பு தொடா்பாக நாளிதழ்களில் அறிவிப்பு செய்ய வேண்டும். போதிய அளவில் மக்கள் அறியும் வகையில் விளம்பரம் மேற்கொண்டு வெளிப்படையாக நடத்தி அனைத்து தரப்பினரின் கருத்துகளை பதிவுசெய்ய வேண்டும்.

தருமபுரி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தால் பயணிகள், பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நல்ல தீா்வு எட்டப்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.