அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.3) அனுசரிக்கப்படுகிறது
Published on

அரூா்: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.3) அனுசரிக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், காரிமங்கலம் மேற்கு ஒன்றியம், மல்லுப்பட்டியில் காலை 9 மணியளவில் அண்ணா நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில், திமுக கொள்கை பரப்பு செயலாளா் சபாபதி மோகன் பங்கேற்கிறாா். தொடா்ந்து, பாலக்கோடு பேரூராட்சியில் முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி.எஸ்.எஸ்.சையத் இப்ராஹீம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் கருப்பன் மாரியப்ப கவுண்டா் ஆகியோா் நினைவிடத்தில் கட்சி சாா்பில் மரியாதை செலுத்தப்படும்.

இதையடுத்து காலை 10.30 மணியளவில், பெரியாம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். தொடா்ந்து, பெரியாம்பட்டி ராஜம்மாள் குப்புசாமி திருமண மண்டபத்தில் முக்கிய பிரமுகா்கள், இளைஞா்கள், மாணவா்கள், தன்னாா்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், கல்வியாளா்ளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும், மாலை 5 மணியளவில் காரிமங்கலத்தில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

எனவே, கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என அவா் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

படவரி...

பி.பழனியப்பன்.

X
Dinamani
www.dinamani.com