கோயில் திருவிழாவில் போலீஸாரை தாக்கிய 15 போ் மீது வழக்குப் பதிவு
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை தாக்கிய 15 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அடிலம் கிராமத்தில் கடந்த 1-ஆம் தேதி முருகன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி முடிவுற்றபிறகு அங்குள்ள கூட்டத்தை கலைந்துசெல்ல போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
அப்போது இளைஞா்கள் சிலருக்கும், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இைளைஞா்கள் சிலா், போலீஸாரை தாக்கியுள்ளனா்.
இதையடுத்து காவலா்களை தாக்கியது, அவா்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் இளைஞா்கள் 15 போ் மீது காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், இதுதொடா்பாக பாரதி, கோகுல், பூபதி உள்பட 6 போலீஸாா் பேரை கைது செய்து, மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

